“தமிழுக்கும் அமுது என்று பேர்– அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !!!”
-பாரதிதாசன்
அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முன் 2002 ல் எலிக்காட் சிட்டி, மேரிலாண்டடில் இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு இன்றும் சிறப்புடன், தமிழ் அன்னை நமது குழந்தைகளோடு வீறு நடை போட்டுக் கொண்டு இருக்கிறாள். இந்த பள்ளியில் படித்த மாணவர்களே ஆசிரியராக பணியாற்றும் அளவிற்கு உருவாக்கிய பெருமை வாய்ந்த தமிழ்ப் பள்ளி நமது எலிக்காட்சிட்டி தமிழ்ப் பள்ளி.
எங்கள் தமிழ்ப்பள்ளி 2002ல் தொடங்கப் பட்டது. 2003 கோடையில் இளைஞருக்காக நடத்தப்பட்ட தமிழ்மொழி முகாமிற்கு பின்னர் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆரம்பத்தில் ஒரு வகுப்பு (7 மாணவர்கள்) மட்டுமே நடந்தது. 2004க்குப் பின் இரண்டு வகுப்புகளாகி (15), 2005க்குப் பின் மூன்று வகுப்புகளாகி (25), 2007ல் நான்கு வகுப்புகளாகின (45). தொடக்கத்தில் எல்லிகாட் சிட்டி மற்றும் கொலம்பியா நூலகங்களில் மாற்று ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.15 முதல் 3.00 வரை நடந்து வந்தது.
2010லிருந்து 2016 வரை எலிகாட் சிட்டி சென்டினியல் உயர் நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை நடைப்பெற்றது
2017 லிருந்து ஹவர்ட்டு உயர் நிலைப் பள்ளியில் சுமார் 280மாணவர்களுடன் 18 வகுப்புக்கள் (8 கல்வி நிலைகள், TVA இடை நிலை மற்றும் TVA மேல்நிலை) நடக்கின்றன. எமது பள்ளிக்கென்றே தனியே தயாரிக்கப்பட்ட பாட நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
TALENT-Tamil Language Education and Training Inc என்னும் அறக்கட்டளையின் பெயரில் அமெரிக்க அரசுடன் வணிகநோக்கற்ற தொண்டு நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.