கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

TALENT - TAmil Language Education aNd Training inc is a volunteer based, not for profit (501-(c)) Organization for Tamil Education. TALENT school proudly steps into its 20th academic year 2022 - 2023!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்”

அன்று பாடிய மகாகவியின் பொன்மொழிகளை இன்றும் நாம் உணர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்றால் தமிழ் மொழியின் சிறப்பு அத்தகையது. மிக அருமையான கடந்த காலமும், வலுவான இலக்கிய மற்றும் இலக்கண மரபும் கொண்ட உலகின் மிகச் சில மொழிகளில் தமிழும் ஒன்றாகும். பல வெளிப்புற தாக்கங்கள் இருந்தபோதிலும், தமிழ் மொழி அதன் உன்னதத் தன்மையை இழக்காமல் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலக அரங்கில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நமது வாழ்வின் முறையோடு கலந்துவிட்ட பல தமிழ் நூல்களை இன்றும் நாம் கொண்டாடுகின்றோம். சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய புதுக்கவிதை, புதினம் வரை நாம் கண்ட புலவர்கள், கவிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளம். இயற்கை, காதல், பக்தி, ஆட்சி முறை என்று அனைத்து வகையான பிரிவுகளுக்கும் இலக்கியத்தில் விடையுண்டு. மொழியை இசையுடனும் நாடகத்துடனும் இணைத்து முத்தமிழாக வழங்கிய சிறப்புத் தமிழ் மொழிக்கு உண்டு. தனித்துவமான எண் அமைப்பு, அளவீட்டுக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள், உற‌வு முறை குறியீடுகள் என்று தனியொரு பாதை அமைத்த பெருமையும் நம் தமிழ் மொழிக்கே உண்டு. நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, உறவுகளின் இன்றியமையாமையை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க மொழியின் பங்கு மிக அவசியமாகிறது. எம்மொழியையும் சாராமல் தனித்து விளங்கும் செம்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை நம் அனைவர்க்கும் உண்டு.

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!!